மனிதன் பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறான். பழக்கத்துக்கு, வழக்கத்துக்கு அடிமையாவது மனிதனுடைய இயல்போ என்று கருதும் அளவுக்கு பழக்க வழக்கங்கள் மனிதனைப் பற்றிக் கொள் கின்றன.
இந்தக் காரணத்தால் தான் மனிதன் எப்போதும் வாழ்க்கையில் நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
தொந்தரவுகள் தொல்லைகள் அசௌகரியங்கள் கூடப் பழக்கம் காரணமாக அவ்வாறு மனிதனுக்கு இன்பமளிப்பது போலத் தோன்றுகின்றன என்பதை விளக்கும் ஒரு ஹங்கேரிய நகைச்சுவைக் கதை உண்டு. அந்தக் கதையை நீங்களும் கேளுங்கள்.
மிகாலி மாமாவுக்கு தொன்னூற்று எட்டு வயது. நமது வாழ்க்கையின் பெரும் பகுதி கிராமப் புறத்திலேயே கழித்தவர். அவர் வசித்த கிராமம் நகர எல்லைகளை விட்டு வெகு தொலைவு விலகியிருந்தது!
நவீன கால நாகரிக வாடையே அந்தக் கிராமத் துக்கு இன்னும் எட்டவில்லை. ரயில் - பஸ் -போன்றவற்றை இந்த கிராம மக்களின் பெரும் பான்மையினர் பார்த்ததே இல்லை.
மிகாலி மாமாவின் பேரப்பிள்ளைகள் பெரிய உத்தியோகங்கள் பார்த்துக் கொண்டு நவீன
பட்டினமான புடாபெஸ்ட்டில் தங்கியிருந்தனர். அவர்களுடைய அழைப்பின் பேரில் மிகாலி மாமா புடாபெஸ்ட் நகரத்துக்கு வந்திருந்தார்.
தொன்னூற்று எட்டு வயது வரை ஒரு மனிதனால் வாழ முடியும் என்ற விஷயமே நகர்ப்புற மக்களுக்கு ஒரு அதிசயமாகும்.
நவீன நகரங்களில் அறுபது வயதுக்கு மேல் வாழ்வோர் அரிது. அனேகமாக ஐம்பது வயது நடப்பதற்குள்ளேயே மக்கள் மரணமடைந்து வருவது வழக்கம்.
அந்த அளவுக்குத் தானே உலக முழுவதிலும் நவீன நகரங்களில் வசிக்கும் மக்களின் ஆரோக்கிய நிலை அமைந்திருக்கிறது.
நமது இந்திய நாட்டின் நிலை மட்டும் இதற்குக் குறைந்ததா என்ன?
நகரத்துக்குத் தொன்னூற்று எட்டு வயது மனிதர் ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தியை ஏதோ ஒரு அற்புதம் போலக் கருதிய நகர மக்கள் மிகாலி மாமாவை வேடிக்கைப் பார்க்கவும், அவருடன் உரையாடவும் அடிக்கடி வரத் தொடங்கினர்.
தொன்னூற்று எட்டு வயது முதியவர் ஒருவர் தமது நகரத்திற்கு வந்திருக்கிறார் என்று அறிந்த உள்ளூர் தினசரிப் பத்திரிகை ஆசிரியர் தமது நிருபர் ஒருவரை அனுப்பி அவரைப் பேட்டி காணுமாறு பணித்தது.
பத்திரிகை நிருபர் மிகாலி மாமாவைப் பேட்டி காண வந்தார்.
நிருபர் தாம் வந்ததன் நோக்கத்தை விவரிக்கக் கேட்டதும் மிகாலி மாமா ஆச்சரியம் அடைந்தார்.
'என்னைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வதனால் உங்கள் வாசகர்களுக்கு என்ன லாபம்' என்று கேட்டார் மகாலி மாமா.
'எங்கள் நகரப் பகுதிகளில் ஒரு மனிதர் தொன் நூற்று எட்டு வயது வரை வாழ்வது பெரிய அதிசயம்' என்றார் நிருபர்.
மிகாலிமாமா கலகலவென்று நகைத்தார்.
ஒரு மனிதன் அதிக நாள் வாழ்வது அவ்வளவு அதிசயமா? எங்கள் கிராமத்தில் நூறு வயதுக்கு மேல் வாழும் மக்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்களே!' என்றார்.
'அது எங்களுக்கெல்லாம் அதிசயத்திலும் அதிசய மாகும். எங்கள் நகர்ப்புறங்களில் ஐம்பது வயது வரை யில் வாழ்வதே பெரிய விஷயம்' என்று கூறினார் நிருபர்
பிறகு பேட்டியைத் தொடங்கினார்.
'மிகாலி மாமா அவர்களே எங்கள் நகர்ப்புற வாழ்க்கையை எந்த அளவுக்கு ரசிக்கிறீர்கள்? இங்கே உங்கள் மனம் கவர்ந்த அம்சம் என்னென்ன?'
'மனம் கவர்ந்த அம்சமா? இந்த நகர்ப்புறத்திலா?' என்று கூறி விட்டு இடிஇடியெனச் சிரித்தார்.
பிறகு சொன்னார் 'ஐயா, இது போன்ற தூசியும் தும்பும் நிறைந்த ஒரு நகரத்தில் ஒரு மனித னால் எப்படித்தான் வாழ முடியுமோ தெரியவில்லை. எனக்கு என்னவோ மூச்சு விடவே கஷ்டமாக இருப்பது மாதிரி இருக்கிறது. நான் நூற்று இருபது வயது வரையிலாவது உயிர் வாழ முடியும் என்று கிராமத்திலிருக்கும் போது நம்பிக்கை இருந்தது.
இங்கே வந்த பிறகு ஓர் ஆறு மாதம் உயிரோடு இருக்க முடியுமா என்றே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. மக்களுடைய நடை உடை பாவனை போன்ற எல்லாவற்றிலுமே முட்டாள் தனத்தைத் தான் காண முடிகிறது. பத்து வயது சிறுவனி லிருந்து ஐம்பது வயது மனிதர் வரை எவ்வளவு இறுக்கமான லினன் உள்ளாடை அணிகிறார்கள். காற்றோட்டமாகவும் ஆரோக்கியமாகவும் தளதள வென முழு ஆடை அணிந்தவர் ஒருவர் கூட காணமுடியவில்லையே வெட்கக் கேடு' என்றார் மிகாலி மாமா.
'உங்கள் கிராமத்தில் காண முடியாத ரயில் பஸ் களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். இவை மிகவும் வசதிகரமான சுகமான போக்குவரத்து சாதனங்கள் அல்லவா?' என்று நிருபர் கேட்டார்.
'அவையென்ன போக்குவரத்துச் சாதனங்களா? ஆடு மாடுகளை அடைக்கும் கொட்டகையா? கொஞ்சமாவது அமைதியாக நிம்மதியாக பயணம் செய்ய முடிகிறதா? ஆயிரந்தான் சொல்லுங்கள் கிராமத்திலே கோவேறு கழுதையின் மீது பயணம் செய்யும் சுகம் வருமா?' என்றார் மிகாலி மாமா,
'அது கிடக்கட்டும் எங்கள் நகரத்து சினிமா, நாடகம் போன்ற பொழுதுபோக்கு நிலையங்கள் கூட உங்கள் மனத்தைக் கவரவில்லையா?' என்று கேட்டார் நிருபர்.
'அவையெல்லாம் மனிதர்களை பைத்தியக்காரர் களாக்கி விடும்' என்றார் மாமா.
எங்கள் நகரத்து உணவு வகைகள் கூட உங் களுக்கு ருசிக்கவில்லையா?' என நிருபர் வினவி னார்.
'சாக்கடை நாற்றமெடுக்கும் சூழ்நிலையில் ஊசிப் போள தீய்ந்து போன பதார்த்தங்களை முள் கரண்டி களால் அள்ளிச் சாப்பிட்டு விட்டால் போதுமா? எங்கள் கிராமத்தில் ஆரோக்கியமான பழைய அமுதுக்கு இது ஈடாகுமா?' என்று கேட்டார் மிகாவி மாமா,
'எங்கள் நகர நவீன சமையல் சாதனமான எரிவாய், மின்சாரம் இவையெல்லாம் கூட உங்கள் மனத்தைக் கவரவில்லையா?' என்று நிருபர் கேள்வி எழுப்பி னார்.
'தம்பி' என்று நிருபரை உரிமையோடு விளித்தார் மிகாலி மாமா.
'வாழ்க்கையின் சிறப்புக்களைப் பற்றி உங்களுக்கு எல்லாம் என்ன தெரியும் ? எங்கள் கிராமத்தில் நான் சொக்கப்பானை கொளுத்தினால் எவ்வளவு குஷியாக இருக்கும் தெரியுமா? நாங்கள் வெறும் கணப்பு என்று மட்டும் தயார் செய்வதில்லை. ஏதாவது கார ணத்தால் தீ மூட்டினால் அது எல்லாவித வேலை களுக்கும் பயன்படுவதாக இருக்கும். வெளிச்சத் துக்கு வெளிச்சம் கதகதப்புக்கு கணப்பு, சமைய லுக்கு நெருப்பு இப்படிப் பலவிதமான பயன்கள்.
இங்கே எங்கள் வீட்டுத் தாழ்வாரத்தில் சிறு அடுப்பு மூட்டினால் போதும். பேரன் அனுமதி கொடுத்தால் அடுப்பை மூடி விடுவேன். அந்த அடுப்பு ஒன்றே வீட்டுக்கு வெளிச்சமாகவும், குழம்பு கறி வைப்ப தற்கான தீயாகவும், கணப்பாகவும், பயன்பட்டு விடும். தனித்தனியாக எரிவாயு, கணப்பு, அடுப்பு விளக்கு என்று வீணாக ஏன் செலவு செய்ய வேண் டும்? அந்த அடுப்பிலே வைக்கும் கறிக் குழம்புக்கு, உங்கள் சிற்றுண்டிக்கானக் குழம்பு ஈடாகுமா?'
நிருபர் அதற்குப் பிறகு எத்தனையோ வினாக் களை எழுப்பி விட்டார்.
என்ன வினா எழுப்பினாலும் நகர்ப்புறங்களைப் பற்றி மிகாலி மாமாவுக்கு நல்ல அபிப்பிராயமே ஏற்படவில்லை. கிராமப்புறங்கள் தான் சொர்க்கம்; நகர்ப்புறங்கள் அனைத்தும் நரகம் என்று அவர் வர்ணிக்கத் தொடங்கி விட்டார்.
திருபர் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட போது 'மிகாலி மாமா! இந்த நகரமாகிய நகரத்தில் இருக்கவே உங்களுக்கு மனம் ஒப்பாதே. எப்பொழுது சொர்க்கமாகிய உங்கள் கிராமத்துக்குப் புறப்படப் போகிறீர்கள்?' என்று கேட்டார்.
எங்கே சிந்திப்பது? மிச்ச காலத்தை நகரத்திலேயே 'கிராமத்துக்கா? இனிமேல் கிராமத்தைப் பற்றி கழித்துவிடப் போகிறேன்' என்றார் மிகாலி மாமா.
இங்குதான் உங்களுக்கு மிகவும் அசௌகரிய மாகவும், தொல்லை தருவதாகவும், ஆரோக்கியக் குறை சூழ்நிலை அமைந்திருக்கிறதே; தொல்லை அசௌகரியத்துக்கு நடுவே எதற்காக வாழ வேண்டும்?' என்று ஆச்சரியத்துடன் கேட்டார் நிருபர்
மிகாலி மாமா சிரித்துக் கொண்டே சொன்னார். 'தம்பி! மனிதன் பழக்கத்துக்கு அடிமை என்ற விஷயம் உனக்குத் தெரியாதா? கொஞ்ச நாள் நகரத்தில் வந்து தங்கிப் பழகியதும் இங்கிருக்கும் தொல்லைகளும் வசதிக் குறைவும் மிகவும் பழகிப் போய்விட்டன. இனிமேல் இந்த மாதிரி சூழ்நிலை இல்லாமல் கிராமத்தில் பொழுது போக்க முடியாது போல் தோன்றுகிறது. அதனால் கிராமத்துக்குத் திரும்பிப் போகும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு இங்கேயே தங்கி விடுவது என தீர்மானித்து விட் டேன்.
நிருபருக்கு ஏற்பட்ட திகைப்புக்கு அளவே இல்லை.

0 Comments